twitter

Wednesday 9 June 2021

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்


தொலைக்காட்சியில்
கோரொனா பாதிப்பு  பற்றிய விபரங்களை செய்தி வாசிப்பாளர் அறிவித்துக் கொண்டிருந்தார்.
அப்போது
"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்"
என்ற பாடல் வரிகள் அழைப்பு மணியாய் செல்லில் ஒலிக்க தொலைக்காட்சியின் சத்தத்தை மட்டும் நிறுத்தி விட்டு
 "என்ன காலை ல யே போன்" என்றான்.
 "சென்னை ல அசோகன் அண்ணன் கொரோனால இறந்துட்டாராம். அதான் சொல்லதுக்கு போன் பண்ணினேன்.வேற ஒண்ணுமில்ல வச்சிருதேன்" என அழைப்பை துண்டித்தாள் தங்கச்சி.

மீண்டும் .
"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்"  என ஒலித்தது செல்பேசி

Wednesday 20 November 2019

மீன ராசி நேயர்களே

Image result for மீனம் எத்தனையோ ப்ரச்னைகளை சரி செய்து இறுதியாய் விமானத்தினுள் அமர்ந்த பின் தான் ஆசுவாசமாய் உணர்ந்தான். அவளிடம் விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டேன் என்று நெட் போனில் சொல்லும் போது பரவசமாய் இருந்தது. ஏதேதோ காரணங்கள் சொல்லி கடந்த ஐந்தரை ஆண்டுகளாக திருமணத்தை தள்ளிப் போட்டு அவனுக்காக காத்திருக்கும் அவள் முகத்தை நாளை இந்நேரம் நேரில் தரிசித்திருப்பான். அவளை பார்க்கும் அந்த தருணம் இதை விட அதிக பரவசமாய் தான் இருக்கும். விமானம் புறப்பட இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது. அது வரை இணைய இணைப்பு கிடைக்கும். ஏதாவது யூ-ட்யூப் ல் பார்க்கலாம் என அதனை தொட்டான். பாப் அப் ல் "மீனராசி நேயர்களுக்கான குருப் பெயர்ச்சி பலன்" முதலில் துள்ளி வந்தது. அவனுக்கான ராசி அது என்பதை எப்படி அறிந்து அவன் கண்ணில் படும் படி செய்கிறார்கள் என்பதையெல்லாம் கற்பனை செய்யாமல் கேட்க தொடங்கினான். குரு எப்போது எந்த ராசியிலிருந்து எந்த ராசிக்கு மாறுகிறார், எந்த வீட்டிலிருந்து எந்த வீட்டை பார்ப்பார் என்ற முகவுரைகளை கேட்கும் போதே கண்கள் தூக்கத்திற்காக ஏங்கின. மீனராசி நேயர்களுக்கு வெளிநாட்டு பயண யோக வாய்ப்பு 80% சதவீதம் உள்ளது எனும் போது ஆழ்ந்து தூங்கியிருந்தான். தொடந்து ஐந்தரை வருடங்களை அரபு தேசத்தில் கழித்தவனுக்கு வெளிநாட்டு பயணம் என்பது தாய்நாடு செல்வதாக கூட இருக்கலாமோ.

Monday 29 July 2019

கூடாதது

ஒரு
மகன் பார்க்கக் கூடாதது
தந்தையின் கண்ணீர்
ஒரு 
தாய் கேட்கக் கூடாதது
மகனின் அவப்பெயர்
ஒரு
சகோதரன் காட்டக் கூடாதது
உடன்பிறந்தோரிடம் அந்தஸ்த்து
ஒரு
தம்பதிகள் கொள்ளக் கூடாதது
தங்களுக்கு இடையில்
சந்தேகம்
ஒரு வெற்றியாளன்
எண்ணக் கூடாதது
எளியவன் என்ற இருமாப்பு
ஒரு
தலைவன் அடையக் கூடாதது நொடிப்பொழுது சபலம்
ஒரு
ஊர் தூற்றக் கூடாதது
வாழ்ந்து கெட்டவனின் வறுமை
கடும் பசியிலும்
உண்ணக் கூடாத இடம்
அவமதித்தவனின் விருந்து
பகைவனிடத்தும்
மகிழக் கூடாதது
அவனது இறப்பு
ஒருவன் செய்யக் கூடாத
காரியம்
தர்மம் கொடுப்பதை தடுப்பது
- யாரோ!

Sunday 26 May 2019

உள் ஆறும் ஆறாதே

உயர்திரு பாரதப்பிரதமர் மோடி அவர்களுக்கு,
வணக்கம். நீங்கள் அரியானவில் சொல்லியபடியே மிகச்சரியாக 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று அசுர பலத்தோடு ஆட்சியில் மீண்டும் ஏறுகிறீர்கள்.வாழ்த்துகள். இந்த வாழ்த்தை சொல்ல என் மாநிலம் எனக்கு ஒரு தகுதியை கொடுத்திருக்கிறது. நாடெங்கும் மோடி அலை வீசிய போது இங்கு வீசவில்லை, ஒர் சாரணர் இயக்க தேர்தலில் கூட உங்கள் தேசிய செயலர் 50 ஓட்டுகள் கூட வாங்க முடியவில்லை, சட்டமன்ற தேர்தலிலும் அப்படியே, இப்போது நாடாளுமன்ற தேர்தலில் அப்படியே. இப்படி தெளிவாக உங்களை தள்ளி வைத்த அந்த தகுதியே என் தகுதி.
உங்கள் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சொல்கிறார்... மோடிக்கு வாக்களிக்காமல் விட்டதால் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்க வாய்ப்பிலை என்கிறார்... அப்படியா ?இது தான் உங்கள் கட்சி புரிந்து வைத்திருக்கும் அரசியல் சட்டமா ? தனக்கு வாக்களித்த மக்களுக்கு மட்டும் செயல்பட சொல்லியிருக்கிறதா ? கடந்த ஐந்தாண்டுகள் அப்படித்தான் செயல்பட்டீர்களா ? பாருங்கள் உங்கள் கட்சியே உங்கள் நிர்வாக லட்சணத்தை இப்படி காட்டிக்கொடுக்கிறது. இது ஒரு சாம்பிள் இது போல இவர் உளறிக்கொட்டியது இவரை போன்றவர்கள் உளரிக்கொட்டியது அதிகம். இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என்பது...
உங்கள் ஆட்சியில் தமிழகத்தில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில் 18 ரைடுகள் நடந்தன. தலைமை செயலகத்தில் தலைமைச் செயலர் அலுவகலம் முதல் கடைசியாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் வீடு வரை.. ஆனால் எத்தனை வழக்குகள் பதிவாகின மோடி அவர்களே ? எண்ணிக்கூட பார்க்க வேண்டிய அவசியமில்லை. எல்லாமே மிரட்டல் அல்லது கமிசன் வாங்கதானே அந்த ரைடு எல்லாமே ? இது இந்தியா முழுமைக்கும் நடந்தது. உங்கள் ஆட்சியில் இது ஊழலில் சேராதா... ஊழல் கேவலம் எனில்.. ஊழலில் கமிஷன் மகா கேவலமில்லையா ? இது போன்ற ஊழல்களை வைத்து மெஜாரிட்டி இல்லாத அரசை நீங்கள் ஆண்டிர்கள். ஆள மட்டுமா செய்தீர்கள். கல்வியை கெடுத்து, விவசாயத்தை கெடுத்து மாநில ஒற்றுமையை கெடுத்து... எங்கள் உரிமைகளை பறித்து.... இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என...
உங்கள் கட்சியின் தேசிய செயலர் நீதிமன்றமாவது மயிராது என்றார்.உங்கள் கட்சியின் விசுவாசி ஒருவர் மீடியாவில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் படுத்துதான் வாய்ப்பை பெறுகிறார்கள் என்றார்.... இவர்கள் இருவர் முன்னும் கைகட்டி நின்ற நீதிமன்றம், தூத்துகுடியில் ஏன் எங்கள் மக்களை கொன்றீர்கள் என கேட்டவளை விரட்டியது... ஒரு குற்றவாளி போல... அவர் பாஸ்போர்டை முடக்கியது... கைது செய்தது... இது மட்டுமா.... இதே கேள்வியை கேட்ட முகிலனை இதுவரை காணவில்லை... உங்கள் நாசகார திட்டங்களை முன்கூட்டியே அறிவித்து வந்த திருமுருகன் காந்தியை வளைத்து வளைத்து கைது செய்தது, எட்டு வழிச்சாலை வேண்டாம் என்ற மக்களை அடித்து விரட்டியது. தூத்துக்குடியில் மக்களை விரட்டி சுட்டுக்கொன்றது. தஞ்சையில் மிரட்டியது. இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என...
இரண்டு பெரும் புயல்களை சந்திதது தமிழகம். அப்போது டிவிட்டரில் கூட நீங்கள் பெரிதாக கேட்கவில்லை. ஏதோ ஒரு நடிகையின் திருமணத்தில் பிசியாக இருந்துவிட்டீர்கள். ஆனால் அதற்கான நிதியை கூடகொடுக்கவில்லை என நான் சொல்லவில்லை... உங்கள் தமிழக ஏஜெண்ட் ஒபிஎஸ் சட்டமன்றத்தில் சொன்னார்.... அதுவும் பதினெழாயிரம் கோடி என சொன்னதாக நினைவு... இது ஒரு பக்கமெனில்.. எங்கள் தமிழக மீனவர்களை உங்கள் இந்திய கடற்படையினர் சுட்டுக்கொன்றனர்... ஆமாம் எங்கள் குண்டுதான் என காவற்படையினர் சொல்ல.... இல்லை என உங்கள் குறுக்குவழி அமைச்சர் நிர்மலா சீதாராமன் .. கடைசிவரை அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை இன்று வரை...இது போக புயலில் சிக்கிய மீனவர்களை காக்க கப்பற்படை விமாங்கள் கேட்ட போது வரவில்லை ....அவர்கள் உப்பு நீரில் உடல் உப்பி மிதந்தார்கள்... நிங்கள் மெதுவாக வந்து அந்த புகைப்படங்களை பார்த்தீர்கள்... இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என.
நீங்கள் வேண்டுமானல் இப்போது தான் பல மாநிலங்களுக்கு மின்சார கொடுத்திருக்கலாம் சாலை போட்டிருக்கலாம், மருத்துவகல்லூரி கனவுகளை கொடுத்திருக்காலம் ( அப்படியேதும் இல்லை அது வேறு விசயம் ) ஆனால் நாங்கள் அதையெல்லாம் தாண்டி வந்துவிட்டோம். உங்கள் குஜராத்தைவிட கல்வியில் வேளாண்மையில், சட்ட ஒழுங்கில், மருத்துவத்தில், சுற்றுலாவில் குறிப்பாக மத ஒற்றுமையில் நாங்கள் பலமடங்கு மேல். ஒன்றை தவிர. அதானியின் நலனுக்காக நீங்கள் கொண்டுவந்த சோலர் பிளாண்டுகள் வகையில் மட்டுமே உங்கள் மாநிலம் முதன்மை. ஆனால் இதுவும் இப்போது இல்லை... இங்கே சுயமாகவே பலர் சோலர் நோக்கி நகர்கிறார்கள்... காரணம் அடிப்படை அறிவு.... உங்களைவிட எங்களுக்கு அது அதிகம். யாரை எங்கே வைப்பது என எங்களுக்கு தெரியும். உங்கள் நடிப்பையெல்லாம் நாங்கள் அதிகம் சினிமாவில் பார்த்துவிட்டோம்..அந்த சினிமா கூட பார்க்க முடியாத மக்களை உங்களால் ஏமாற்ற முடிந்தது. எங்களை முடியவில்லை. இப்போது தெரிகிறதா நாங்கள் ஏன் உங்களை ஏற்கவில்லை என.
இன்னும் இருக்கிறது மோடி அவர்களே சொன்னால் நீண்டுகொண்டே போகும். ஆனால் பாருங்கள் சம்மட்டியால் ஓங்கி அடித்திருக்கிறோம் உங்கள் பிஜேபி நடுமண்டையில். இன்னும் புத்தி வரவில்லை உங்கள் சகாக்களுக்கு... ஜனநாயகம் என்றால் என்னவென தெரியாமல், கூட்டாச்சி, மாநில சுயாட்சி என எதுவும் புரியாமல் நீங்கள் திணித்த நீட் போல, ஜிஎஸ்டி போல, பணமதிப்பிழப்பு போல... உங்கள் கட்சி மூடர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் அதாவது நாங்கள் உங்களுக்கு ஓட்டுபோடவில்லை அதனால் காவிரி முதல் முல்லைபெரியாறு வரை உங்களிடம் ஏதும் கேட்க கூடாது என்கிறார்கள். என்ன ஒரு அறிவு பாருங்கள்... உங்களை போல...
அதே ரோஷத்தோடு வரியை வேண்டாமென சொல்ல சொல்லுங்கள்.. இந்தியாவில் 40% ஜிடிபி தென்னிந்தியர்கள் நாங்கள் அல்லவா... சொல்ல சொல்லுங்கள். எங்கள் வரியை வைத்து நாங்களே எங்களை சரி செய்துகொள்கிறோம். இல்லை எனக்கு அதையெல்லாம் தீர்த்து வைக்கும் வக்கில்லை என சொல்லுங்கள் கேட்கிறோம். இல்லை தமிழ்நாடு தனியாக இருந்துகொள்ளட்டும் சொல்லுங்கள். முடியுமா ? வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் பிரதமர். இதை நீங்கள் புரிந்தால்.. அதன் படி தமிழகத்தை வஞ்சிக்காத திட்டங்களை கொண்டுவந்தால் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இல்ல உங்கள் கட்சி மூடர்கள் சொல்வது போலத்தால் என்றால்... தமிழர்கள் எதற்கு துணிந்து நிற்பார்கள்.
ஏனெனில்.... உங்களுக்கு புரியாது.... எங்கள் குடி மூத்தகுடி. நீங்கள் ஓசைகளில் இருந்த போதே நாங்கள் இலக்கணத்தை உருவாக்கிவிட்டோம். அது கொடுத்த அறிவு யாருக்கும் அஞ்சி நிற்காது. உங்கள் இயக்க மூதாதையர்கள் வரலாறு எல்லாம் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து விசுவாசம் காட்டி வாழ்ந்த வகையறா. ஆனால் இங்கே போடா புண்ணாக்கு என தூக்கு மேடை ஏறி நின்றவர்கள்.
உங்களைவிட (?) நன்றாக ஆட்சி செய்த வாஜ்பாய்க்கு கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இனியாவது ஆளுங்கள். ஆள்வதை போல செய்தி பரப்பாதீர்கள்.
நன்றி: தோழர் Krishna Kumar

Thursday 21 March 2019

வண்ண வண்ண சிரிப்புகள்






Image result for signal light





பச்சை  மஞ்சள் சிகப்பு என
மாறி மாறி நகைக்கின்றன
சாலைகளின்
நில்செல் விளக்குகள்
தாம் கண்டு ரசிக்கும்
உயிருள்ள மனிதர்களின்
கட்டுபாட்டையும் 
விட்டுக் கொடுத்தலையும் 
எண்ணி எண்ணி




Thursday 5 April 2018

தாலி கட்டியுள்ள பார்வதி



பார்வதியின் கழுத்திலிருந்து 


தாலி கேட்டது


சிவனே சௌக்கியமா?


இதற்கு பொருத்தமாய் பார்வதி - சிவன் இணைந்து இருக்கும் புகைப்படங்களை GOOGLE ல் தேடினேன்.
கடைசிவரை கிடைக்கவே இல்லை தாலி கட்டியுள்ள பார்வதியின் படம்